Make your own free website on Tripod.com
Home | fødselsday | sølvbryllup | music | TODAY | music | favorite links | center | About Me | Favorite Links

varahi amman

வராகி அம்மன்

ganapati.jpg

பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா   

umai.jpg

அன்னை வராகி நமக்கு அருள் வழங்கும் முகமாக கடந்த 1988ம் ஆண்டு பங்குனி மாதம் எம்மண்ணில் அவதரித்தாள்.
பதினைந்து மாதங்கள் வேப்பமரத்தின்  கீழ்  அடியார்களுக்கு அருள் வழங்கிய அன்னைக்கு கடந்த 1989ம் ஆண்டு ஆனி மாதம் மிகவும் சிறிய கோவில் ஒன்று கட்டப்பட்டது. 
 அதன் பின் அன்னையின் அடியார்களின் உதவியால் பெரிதாக கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
 எங்கள் அன்னையை எங்களுக்காக உருவாக்கித்தந்த பெருமை காலஞ்சென்ற திரு செல்லத்துரைஐயா அவர்களையே சாரும்.
அடியார்களுக்கு அருள்வாக்கு கூறும் அன்னைக்கு
வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
சிறப்புப் பூசைகள்  நடைபெறும்.
 அது தவிர ஒவ்வொரு ஆண்டும் பங்குனித்திங்களிலும் ஆனி உத்தரத்திலும் அன்னைக்கு விழா எடுப்பது வழக்கம்.


durga.jpg

durga2.jpg

அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்து மனிதகுலத்தைக் காக்க வராகி வடிவம் கொண்டாள்            

x.jpg

வராக முகத்தை உடை யவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்கங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் என்றும் நீங்காது இருப்பாள்.

varahi2.jpg

மனதின் சுய நிலையான சுத்த நிலையே

மூலமான வஜ்ர வராகி .

அவள் எம்முள்ளே உறைகிறாள்,

எங்கும் தேடவேண்டாம்,

வெளியே தேடுதல் சிறுபிள்ளைத்தனமானது, மூடத்தனமானது.

மனதின் உண்மை நிலையானது,

எல்லாக் கற்பித்தல்களையும் கழிப்பது

அதுவே மிக உயரிய சித்தி '

y.gif

வராகியை சப்தமாதர்களில் ஒருத்தியாகவும் காணலாம்.  
ஸ்ரீலலிதாம்பிகையின் தளபதியாகவும் காணலாம். அவளை
தண்டநாதா என்றும் தண்டினீ என்றும் குறிப்பிடுவார்கள். அவளுடைய
பரிவாரங்கள் அனேகர். அஸ்வாருடா போன்ற பலர். தண்டநாதாவை
மஹாவாராஹி என்றும் சொல்வதுண்டு.
மஹாவாராஹி தன்னுடைய அம்சத்தை இன்னொரு வடிவமாகவும்
காட்டுவாள். திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரியாக
விளங்கிக்கொண்டிருக்கிறாள்.

அதுபோலவே பாலையை தேவசேனாவாகவும் வாராஹியை
வள்ளியாகவும் காண்கிறார் ஒரு சித்தர்  வராகி வரம் தரும் தெய்வமாகவும்
விளங்குபவள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வராகி வழிபடப் பட்டிருக்கிறாள் வராகியில் பல வடிவங்கள் உண்டு. இரண்டு கைகள்,  நான்கு கைகள், எட்டுக்கை, பதினாறு கை என்று விளங்கும். எத்தனை கைகளில் எத்தனை ஆயுதம் ஏந்தியிருந்தாலும் 
அவளுடைய மூலமான முக்கிய கருவிகள் உலக்கையும் கலப்பையும்தான். 
வராகியில் பலவகைகள் உண்டு. ஸ்வப்ன வராகி போன்றவர்கள்
பரிவார தேவதைகளும் உண்டு. அந்தினீ, ருந்தினீ,ஜம்பினீ,ஜ்ரும்பினினீ, மோஹினி என்று பலர் இருக்கிறார்கள்.
 பகளாமுகி போன்ற தெய்வங்களும் வராகி சம்பந்தப்பட்டவர்கள்தாம்.


             

a.gif

அ) வராகம்: பன்றியின் முகம், மனித உடல்; வலது புறத்தில் கதாயுதம் மற்ற ஆயுதங்கள்; இடப்புறம் லக்ஷ்மி, சங்கம், தாமரைமலர், லக்ஷ்மி முழங்கையில் அமர்ந்-திருக்க வேண்டும். பூமியும் அதனைத் தாங்கும் அனந்தாழ்வாரும் மூலத்தருகே இருக்க வேண்டும்.
 ஆ) வராக உருவத்தை அமைப்பதில் இரண்டாம் வகை: நான்கு கைகளில் ஒன்றில் வாசுகியைப் பற்றியிருத்தல்; இடக்கையினால் பூமியைத் தூக்கி இருத்தல்; காலடியில் லக்ஷ்மி அமர்ந்திருத்தல்; வலப்புறம் சக்கரம், வாள், தண்டம், அங்குசம், இடப்புறம் சிங்கம், தாமரை மலர்; கதை, பாசம் வலப்புறத்தில் கருடனது தோற்றம்; விசுவரூபத்துக்கு நான்கு முகங்கள் இருபது கைகள் அமைக்கப்பட வேண்டும்.

tn_durga2_sm.jpg

மதுரை அரசாளும் மீனாட் க்ஷி
மாநகர் காஞ்சியிலே காமாட் க்ஷி


தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி?

திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கைலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி

உலகாளும் ஆதிபராசக்தியின் மறுபெயரே வராகி ,
வராகியை வராகிலக்ஷ்மி என்றும் அழைக்கலாம்  

lakshmi.jpg

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி

(ஸ்ரீசக்ர)
பலவிதமாய் உன்னைப் ஆடவும் பாடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி

 
துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா....அகிலாண்டேஸ்வரி

(ஸ்ரீசக்ர)



lak2.jpg


 


உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி 
 மாயவரம் அபயாம்பிகா.
மதுரை நகர் மீனாட்சி, காஞ்சிபுரம் காமாட்சி 
காசி விசாலாட் க்ஷி, திருக்கடவூர் அபிராமி 
சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா 
திருவாரூர் கமலாம்பிகா
நாகாம்பா யோகாம்பா லலிதாம்பா ஜெகதாம்பா 
பாலாம்பா நீலாம்பா கனகாம்பா சௌடாம்பா 
சிவகாளி நவகாளி திருசூலி சுபநீலி 
ஸ்ரீதேவி பூதேவி ஜயதேவி மலையரசி 
அம்மாயி பொம்மாயி அன்பாயி குழுமாயி 
பொன்னாயி பூவாயி வேலாயி வீராயி 
ஆரல்வாய் இசக்கி அம்மா,
வாடீ! ஆரணி படவேட்டம்மா!
திருவாங்கூர் மேகவல்லி தாயி! 
திருக்கூடல் மதுரவல்லி புதுக்கோட்டை
புவனேஸ்வரி ரங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம்
மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி  
நாமக்கல் அரசாணி அங்காளி செங்காளி
சந்தோஷி மாதா.
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை
செண்பகமே செல்லாயி, சிலம்பாயி,
கண்ணாத்தா வா வா ! 
கஞ்சனூர் வனதுர்க்கா மாவூரு ஸ்ரீகாளி
கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி
வலங்கைமான் திருமாரி வழி காட்டும்
திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா
மலையம்மா, வேலம்மா திருவத்தூர்
 வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா
மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !
விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல்
 பாவாயி காரைக்குடியம்மா
பொற்கூடையம்மா ! 
ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி 
பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி 
திருவானைக்காஆளும் அகிலாண்டேஸ்வரி 
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி!
ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி 
வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி 
உயிர் காக்க வா சக்தி !" 
எல்லைதனை காக்கின்ற கன்னியகுமாரி 
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா 
செட்டியார் தோப்பின் திருபாச்சியம்மா 
கோயமுத்தூரின் கொண்ணியம்மாவே 
சத்தியமங்கலத்தின் பன்னாரியம்மா 
கொல்லிமலை வாழும் எட்டுக்கைய‌ம்மா 
வாகேஸ்வ‌ரி, பாகேஸ்வ‌ரி வைத்தீஸ்வ‌ரி
யோகேஸ்வ‌ரி 
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகாவே 
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி
பரமேஸ்வரி 
ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே 
ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர்
அன்னை அன்ன பூரணி 
மலைக்கொட்டை வாழும் மத்துவார்குழலி 
திருச்செங்கொட்டு அம்மா அர்த்தனாரீஸ்வரி 
திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாறி
சிவதாண் டவம் ஆட  ஒடிவாம்மா 
 ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி 
வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி 
உயிர் காக்க வா சக்தி !"
தங்குச்செடித்தெரு காளிகாம்பாவே
தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே
நாட்டரசன்கோட்டை நாச்சியம்மாவே 
ஆத்தா கருப்புரு பெட்டிகாளி,
பேச்சிப் பாறை உள்ள பேச்சியம்மாவே 
பட்டீஸ்வரன் கோயில் கோமதியம்மா,
மேல்மலையனூர் அங்காளம்மா 
அடி கங்கையம்மா, தாயே துளசியம்மா,
வேம்புலியம்மாவே குதூகலத்தம்மா 
உப்பிலியம்மாவே குலசியம்மா,
சென்னியம்மா அடி கொண்ணியம்மா 
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா 
உத்துப்பாலையம்மா செப்பாத்தம்மா
அடி சிந்தாமணியம்மா நாருழியம்மா 
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா
சுந்தரி சௌந்தரி சோலையம்மா 
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா
அடங்காத பேயோட்ட‌ மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி 
வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி 
உயிர் காக்க வா சக்தி ! 
குலசேகரபட்டின முத்தம்மாவே
குற்றாலசத்தி பாரசக்தி தாயே 
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே
பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே
கொடியிடையம்மா திருவுடையம்மா 
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா 
திருவக்கரையின் வக்கிரகாளி
சிருவாச்சுராலே என் மதுரகாளி 
சேலத்து ராஜகாளியம்மாவே
சிந்தல்கரையில் வாழ்பவள் நீயே 
சொட்டானிக்கரையின் பகவதியம்மா
திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா 
பம்பைமதி செண்டை இது சிந்தும் உயிர் 
விண்ணும் அது கண்ணின்நகல் காண்டாலே
உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும்
என்னை இங்கு தேடி எழுந்தோடி வாடி 
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி 
கடலுக்கு ஓடி உலகத்தில் ஏது
காற்றுக்கு வேலி கிடையாது வாடி 
தஞ்சம் உன்னை தஞ்சம்
எனக்கெஞ்சும் இனம் நன்மைப்பெற
அன்னைதிருக்கையாலே அருள் வழங்கிடு தாயே 
வஞ்சம் நயவஞ்சம் அதன் நெஞ்சம்
இனி அஞ்சும் படி 
மண்ணும் துயர் கண்ணீர்விட
கொதித்து எழுந்திடுவாயே 
வரவேண்டும் வரவேண்டும்
ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம்
எடுக்கின்ற ஒருகாலம் 
உயிர் தின்னும் பேயோட்ட வாடி வராகி 
மாயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த
ஏவல்கள் செய்த இடங்கல்களை அடி 
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட
வெண்கரையம்மாவே வாடியம்மா 
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா
நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா 
ஏணியம்பேடு அபிராம சுந்தரி
ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி  
பாடி உனைப்பாடி அடைந்தோமே நலம் கோடி 
அடிதேவி அருளோடு வரவேண்டும் எனைத்தேடி 
திருமாலின் தூணையாளே ஸ்ரீரங்கநாயகி 
வடிவேலன் மனையாளே  தெய்வானையம்மா 
பண்ரொட்டி வாழ்கின்ற கன்னிகா பரமேஸ்வரி 
திண்டுக்கல் தாயே கோட்டை மாரி 
திருசாத்தனூர் அலமேலு மகிடாசுர மர்தினி 
புன்னைநல்லூர் மாரி பூவாடைக்காரி 
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே 
விருப்பாச்சி வீரம்மா வெளியே நீ வாடி 
அனியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே 
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே 
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா
 அம்மா அம்மா அம்மா

ஆக்கம்
வினோதினி-ஸ்ரீஸ்காந்தகுமார்
டென்மார்க் 

Please get in touch with any comments or reactions to my site.